ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக உதவிகள் வழங்கி வைப்பு

 

மட்டக்களப்பு தன்னாமுனையில் நேற்று திங்கட்கிழமை  ஏஞ்சல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் இருந்து சிறந்த முறையில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 20 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏஞ்சல் சிறுவர் திட்டம் ஊடாக 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள் மெதடிஸ் திருச்சபை தன்னாமுனை ஏற்பாட்டில் இடம் பெற்றது

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தன பாலசுந்தரம் மற்றும் சிறப்பு விருந்தினர் ஏறாவூர் பற்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோஸ்தர் இ.நிரோஷன், கிராம சேவையாளர் ஜே. ஏ.சுரேஷ், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்