
எல்ல, ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு
கண்டி – பதுளை ரயில் மார்க்கத்தின்இ எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்களில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாலத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த இடமாக எல்ல ஒன்பது வளைவு பாலம் காணப்படுகின்றது.
எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையத்திற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், மற்றும் 80 அடி உயரமும் கொண்டது.
இப்பாலம் 1921 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டப்பட்டு 100 வருடங்களுக்கு மேலான குறித்த பாலத்தின் அடிப்பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.