எலும்புகளை வலுவாக்க உதவும் 5 பழங்கள்

எலும்புகளை வலுவாக்க உதவும் 5 பழங்கள்

எலும்புகளை வலுவாக்க உதவும் 5 பழங்கள்

🟤எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒன்று. எலும்புகளின் ஆரோக்கியத்தில் எப்போதுமே நாம் சாப்பிடும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

🟤பால் பொருட்களே கால்சியத்தின் முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் சிலருக்கு பால் பிடிக்காமலோ அல்லது அதனால் அலர்ஜியோ ஏற்படலாம். இந்த சூழலில் அவர்களுக்கு போதுமான கால்சியம் கிடைக்காமல் போகலாம்.

🟤இதனை சமாளிக்க பல பழங்கள் வியக்கத்தக்க வகையில் கால்சியம் நிறைந்தவையாகவும் எலும்புபின் வலிமைக்கும் முக்கிய பங்காற்றுபவையாகவும் இருக்கின்றன. இந்த பதிவில் எந்தெந்த பழங்கள் இயற்கையாகவே எலும்பின் வலிமையை அதிகரிக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

🔺பப்பாளி கால்சியம் நிறைந்த நமக்கு எளிதில் கிடைக்க கூடிய பழ வகைகளில் ஒன்று, இது 100 கிராமுக்கு சுமார் 20 மி.கி. என்ற அளவில் கால்சியத்தை கொண்டிருக்கிறது. மேலும் பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் பப்பைன் போன்ற நொதிகள் நிரம்பியுள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் எலும்புத் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கியமானதாக இருக்கின்றன

🔺ஆரஞ்சு என்றாலே வைட்டமின் சி கொண்ட பழம் என்பது நாம் அறிந்ததே. இது குறிப்பிட்ட அளவு கால்சியத்துடன், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. ஒவ்வொரு 100 கிராம் ஆரஞ்சுப் பழமும் சுமார் 45 முதல் 50 மில்லிகிராம் கால்சியத்தை கொண்டிருக்கிறது. ஆரஞ்சுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

🔺எலும்புகளின் ஆரோக்கியத்தில் எலுமிச்சையின் பங்கு மிகவும் முக்கியமானது. எலுமிச்சை எலும்புகளை வலுப்படுத்தும். 100 கிராம் எலுமிச்சை 33 மில்லிகிராம் கால்சியத்தைக் கொண்டுள்ளது. எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

🔺உலர்ந்த அத்திப்பழங்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகும். 100 கிராம் உலர் அத்திப்பழத்தில் 160 மி.கி. கால்சியம் இருக்கிறது. இது ஒரு சுவையான தின்பண்டமாக இருப்பதோடு எலும்புகளுக்கு தேவையனான கால்சியம் சத்தையும் வழங்குகிறது. மேலும், சர்க்கரை சேர்க்காமலேயே இனிப்பு சுவையையும் வழங்குகின்றன. அமெரிக்க ஆய்வு முடிவுகள், உலர்ந்த அத்திப்பழத்தில் இருக்கும் அதிக கால்சியம் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்று கூறுகிறது.

🔺கிவிகள் அதிக வைட்டமின் சி உள்ள பழங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. 100 கிராம் கிவி பழத்தில் சுமார் 34 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சப்போட்டா பழத்தின் ஒரு வகையாக தோற்றமளிக்கும் இந்த பழம் உணவில் போதுமான கால்சியத்துடன் ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தையும்இ எலும்பு அடர்த்தியையும் பராமரிக்கிறது.

எலும்புகளை வலுவாக்க உதவும் 5 பழங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்