எலான் மஸ்க் வசமாகும் டுவிட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதை மறுத்த எலான், தற்போது 41 பில்லியன் டொலருக்கு (இலங்கை மதிப்பில் 9 இலட்சம் கோடி) ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.