எறும்புத்தொல்லையை விரட்ட எளிய வழிமுறைகள்

எறும்புத்தொல்லையை விரட்ட எளிய வழிமுறைகள்

எறும்புத்தொல்லையை விரட்ட எளிய வழிமுறைகள்

🔴மழைக்காலத்தில் நுளம்புத்தொல்லை அதிகமாக இருப்பது போல வெயில்காலம் வந்தால் எறும்புகளின் தொல்லை அதிகமாக இருக்கும். சுவரின் ஓரங்களில் ஊர்ந்து செல்வது எரிச்சலை ஏற்படுத்தும் அதே நேரத்தில், இவை சில கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தும்.

🔴சில எறும்பு வகைகள் உணவுப் பொருட்களை அழிப்பதுடன் நமக்கு கடுமையான அலர்ஜிகளை ஏற்படுத்தும் மேலும் சில எறும்புகள் நம்மை கடித்து உடலில் ஆங்காங்கே வீக்கங்களை ஏற்படுத்தலாம். இது மட்டுமின்றி எறும்புகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தொல்லை தரும் எறும்புகளை விரட்டுவதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது, அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

🐜எறும்புகளை விரட்டும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று சுண்ணாம்பு. சுண்ணாம்பில் கால்சியம் கார்பனேட் உள்ளது. இது எறும்புகளைத் தடுக்க உதவுகிறது. எறும்புகள் நுழையும் இடங்களில் சிறிது சுண்ணாம்புத் தூளைத் தெளிப்பதன் மூலம் எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

🐜எறும்புகள் நுழையும் இடங்களில் எலுமிச்சையை பிழியவும் அல்லது எலுமிச்சை தோல்களை வைக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட தண்ணீரில் உங்கள் வீட்டைத் துடைக்கலாம். எறும்புகளுக்கு எலுமிச்சை சாறின் வாசனை பிடிக்காது, அதனால் அவை அதிலிருந்து விலகி இருக்கும். புளிப்பு மற்றும் கசப்பான பொருட்கள் எறும்புகளைத் தடுக்கும்.

🐜ஆரஞ்சு எலுமிச்சைப் பழத்தைப் போன்றதுதான், அவை எறும்புகளை உங்கள் வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கின்றன. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் மற்றும் சில ஆரஞ்சு தோல்களை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும், இது எறும்புகளை அகற்ற உதவும்.

🐜எறும்புகள் அதிகம் வெறுக்கும் பொருட்களில் ஒன்று மிளகு. உங்கள் வீட்டிற்குள் எறும்புகள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூவவும், இது எறும்புகளை திறம்பட விரட்ட உதவும். நீங்கள் மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் கரைசலை உருவாக்கி, எறும்புகள் நுழையும் பகுதிகளுக்கு அருகில் தெளிக்கலாம். மிளகு எறும்புகளைக் கொல்லாது, ஆனால் அவை உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும்.

🐜வீட்டிற்குள் எறும்புகள் நுழையும் மூலைகளில் உப்பைப் பரப்புவது எறும்புகளைத் தடுக்க உதவும். இயற்கையான முறையில் எறும்புகளை அகற்றுவதற்கான சிறந்த மற்றும் மலிவான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு சாதாரண உப்பே போதும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் அதிக அளவு உப்பு சேர்த்து, கரைத்து அவற்றை எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிக்கவும்.

🐜வெள்ளை வினிகரின் வாசனையை எறும்புகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து ஒரு கரைசலை உருவாக்கவும். அதில் சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கவும். இந்த கரைசலை எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிக்கவும். இதை தினமும் ஒரு முறை செய்யவும். இந்த வழிமுறையும் எறும்புகள் வருவதைத் தடுக்கும்.

எறும்புத்தொல்லையை விரட்ட எளிய வழிமுறைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்