எரிவாயு கொள்கலன் பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து
குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வாரியபொல நகருக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.