Sri Lanka Tamil News Site

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடை

- Advertisement -

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத்தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -