எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை

தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது , தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.