Sri Lanka Tamil News Site

எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் கைது

- Advertisement -

வத்தளை – கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் சட்டவிரோதமான முறையில் கொள்கலனில் கொண்டு செல்லப்பட்ட 1660 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டீசல் மற்றும் சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 400 லீற்றர் பெற்றோலை வைத்திருந்த நபரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காகவே சந்தேக நபர் இவ்வாறு பெற்றோலை பதுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!