எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் : நால்வர் உயிரிழப்பு

குருணாகல் – வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர்.

மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிவாயு நிரப்பு மையம் ஒன்றில் இந்தத் தீர்ப்பரவல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு நிரப்பு மையத்திற்கு எரிவாயு கொள்கலன் ஊர்தி ஒன்று வாயுவை நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக அங்கு தீப்பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ தற்போது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க