
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்
டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் 15 -17 ஆம் திகதிகளில் வருவதற்கும், பெற்றோல் கப்பல் 22-24 ஆம் திகதிகளில் வருவதற்கும் ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி வர வேண்டிய இந்த கப்பல்கள், வானிலை சீர்கேடு காரணமாக தாமதமாகிவிட்டது.
சரியான நேரத்தில் எரிபொருட்களை கப்பலில் ஏற்றிக்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் எரிபொருட்களுடன் கப்பல் நேற்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதை விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
இதேவேளை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழு கொடுப்பனவுகளும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.