எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவைக்கு பாதிப்பு தராது

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித இடையூறும் இன்றி திட்டமிட்டபடி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையின் ஏனைய பொதுப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.