எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் விபத்து : 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45மணியளவில்,  இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் பௌசர், வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்த குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்

இவ் விபத்தால் டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்