எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

-பதுளை நிருபர்-

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்துக்கு சொந்தமான கொள்கலன்,  பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் உடகும்பல்வெல பகுதியில்  இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து பதுளைக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் வேளையிலேயே குறித்த கொள்கலன் பவுசர் விபத்துக்குள்ளானது.

இதனால் பதுளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் தாமதமாகி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்