Sri Lanka Tamil News Site

எரிபொருள் இல்லை : சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்

- Advertisement -

-கிளிநொச்சி நிருபர்-

எரிபொருள் இன்மை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களது பணி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

- Advertisement -

பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று திங்கட்கிழமை தாம் பணிக்கு செல்வதற்காக, குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, கிராமக்கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற போது, பெற்றோல் இல்லை என சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கைவிரித்த நிலையில், அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் திரும்பி சென்றுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது, இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், தெரிவித்தார்கள்.

- Advertisement -