‘எமது காலம்’ எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் அருங்காட்சியகம்

‘எமது காலம்’ எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் அருங்காட்சியகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகமானது மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஜீலை 9 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் வரலாற்றை சான்றுபடுத்தும் விடயங்களை மேற்குறித்த திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம்.

இந் நிகழ்வில் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, ஸ்கோப் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சுஜன் நாணயக்கார, Search for Common Ground) நிறுவன தேசிய பணிப்பாளர் நவாஸ் மொஹமட், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், தொழில் நுட்ப தலைமை உதவியாளர் மொஹமட் மாஹிர், வலகய கல்வி பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்