உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இவ்வளவு பெரிய தொகை நட்டஈடு வழங்க தன்னிடம் போதிய பணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள நண்பர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து உதவி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனவரி 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் எஸ்.ஐ.எஸ் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ்க்கு 10 மில்லியன் ரூபாவினையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் அடிப்படை உரிமைகளை இந்த பிரதிவாதிகள் போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்து நீதிமன்றம் இவ் உத்தரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -