
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்
-பதுளை நிருபர்-
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அந்த வருட மாணவர்களின் கல்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து வேறுபாடு மோதலாக மாறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்