ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மட்டக்களப்பு போரதீவுபற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப் பகுதிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் பட்டிருப்பு கல்வி வலையத்துக்குட்பட்ட வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சுற்று வேலியையும், அருகில் இருந்த பாலர் பாடசாலை ஒன்றின் வேலியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை, விவேகானந்த புரம் போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

தளவாய் காட்டினை அண்மித்த காட்டு சூழலில் தங்கியிருக்கும் 30 மேற்பட்ட காட்டுயானைகளால் கால்நடைகளும் பாதிப்படைவதாகவும், இப் பிரதேசத்தில் பல்வேறு மனித உயிரிழப்புகள் நிகழ்ந்தாகவும், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர் தினமும் யானைகளை வெடி கொளுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்