ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-

காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அன்னாரின் திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெண்கரம் படிப்பகத்தின் செயற்பாட்டாளர் கோமகன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அன்னார் ஊடகவியலாளராக பணியாற்றும் போது மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.