
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவித்தல்
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்