உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதியிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை 1387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

முறைப்பாடுகளில் 1214 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 173 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க