உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவின் ஆசிகுளம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெலிகந்த பொலிஸ் பிரிவின் நவசேனபுர பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலிகந்த – நவசேனபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க