உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

– யாழ் நிருபர்-

வடமாகாண சுற்றுலாப் பயணியகம்இ தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு கண்காட்சி கூடங்களை அங்குராப்பணம் செய்துவைத்தார். இவ் கண்காட்சியில் 43 உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செய்துள்ள பொருட்களின் கூடாரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் 18 உணவுசார்ந்த பொருட்களும், 25 கைவினை சார்ந்த உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சுற்றுலா தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்