உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு திருவிழா

மாணவர்களிடத்திலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) ஏற்பாட்டிலும் டயக்கோனியா (Diakonia) அமைப்பின் ஆதரவிலும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விளையாட்டு திருவிழா கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை மாலை  ஆரம்பமானது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ்.ஆர்  இஸ்ஸதீன் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக கல்முனை  கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்  ஜாபீர்,  விசேட அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்  முதர்ரிஸ்    மற்றும் இந்நிகழ்வுக்கு பொறுப்பான முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்(MWRAF) நிறைவேற்று பணிப்பாளர் எயன் ஜப்பார், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் லைலா உடையார், நிதி உத்தியோகத்தர் குமுது பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கல்முனைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏழு பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் பலர் இந்நிகழ்வில் அதிதிகளாக  கலந்து கொண்டனர்.

Shanakiya Rasaputhiran

இவ் விளையாட்டுத் திருவிழாவில் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதோடு போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட பாடசாலைகளுக்கு நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது

மேலும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ்.ஆர்  இஸ்ஸதீனை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் வந்திருந்த அதிதிகள் அனைவரும் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad