உலகிலேயே அதிக வளி மாசு உள்ள நகரமாக புதுடெல்லி

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று வளி மாசடைந்துள்ளதன் படி, அக் காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளின் புகையைச் சுவாசிப்பதற்கு ஈடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வளி மாசு உள்ள நகரமாகப் புதுடெல்லி இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

டெல்லியின் வளி மாசு சுட்டெண் சராசரியாக 100க்குக் கீழே இருக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது அங்கு வளி மாசு சுட்டெண் 1000ஐ கடந்து ஆபத்தான நிலையை எட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நச்சு வாயுக்களின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், நீர்த்துளிகளைத் தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்