உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்பு!

2025 ஆம் ஆண்டின் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வு, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் ,  தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகின்றது.

“எத்திசையும் தமிழணங்கே!” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 60 நாடுகளிலிருந்தும் 17 மாநிலங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ் நிகழ்வில் விசேட அழைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்