உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம்

 

உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் குருதி வங்கியின் பிரதம வைத்தியர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதிநிதிகள் மற்றும் உலக தன்மம் சமூக அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு நேற்று முற்பகல் 8.30 மணியிலிருந்து 3.30 மணிவரை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது

இந் நிகழ்வில் நூற்றுகணக்கிலான குருதி கொடையாளிகள், உலகத்தன்மம் சமூக அமைப்பின் முக்கியஸ்தர்கள்,  நிர்வாக அதிகாரிகள்  எனப்பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்