Sri Lanka Tamil News Site

உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

- Advertisement -

தலவாக்கலை-மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதனை தொடர்ந்து, சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -