உருகிய லிங்கனின் மெழுகுச் சிலை

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக குறித்த 6 அடி உயரமான சிலை உருகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வொஷிங்டனில் சராசரியாக 37 பாகை செல்சியஸ் அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் கேம்ப் பார்க்கரில் வைக்கப்பட்டுள்ள ஏனைய மெழுகுச் சிலைகளும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்