உரிமை கிடைக்காமல் சலுகை வேண்டாம் என்கிறவர்கள் மதியம் 12 மணிக்கெல்லாம் அரசாங்கத்தின் அறுசுவை உணவை மாத்திரம் உண்ணுவார்கள்

உரிமை கிடைக்காமல் அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ள மாட்டோம் என சொல்கிறவர்கள் மதியம் 12 மணிக்கெல்லாம் குழுவாக அமர்ந்து அரசாங்கத்தின் அறுசுவை உணவை மாத்திரம் உண்ணுவார்கள் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நீண்ட காலமாக பாவனையற்று கிடந்த வீதி ஒன்றினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்