உயிர் பயத்தால் வெளியே வர மறுக்கும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் : வெளியே வர சொல்லி கோஷமிடும் போராட்டக்காரர்கள்!

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் அர்ஜுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து இன்று திங்கட்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வைத்தியர் சுகாதார துறையில் இடம்பெறும் பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்திரன மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோரை வெளியே வரச் சொல்லி போராட்டம் முன்னெடுத்தனர்.
தனக்கு போராட்ட களத்திற்கு வருகை தருவதற்கு உயிருக்கு ஏதாவது நடந்துவிடும் என்று பயமாக இருப்பதாகவும், தம்முடன் பேசுவதற்குஇ போராட்டத்தில் ஈடுபடுகின்ற ஐவரை அழைத்து வருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக, தெரிய வருகின்றது.
இந்நிலையில், மக்களுக்காக சேவையில் ஈடுபடும் அதிகாரிகள் மக்களுக்கு பயந்து கொண்டு ஏன் பதவியில் இருக்க வேண்டும் எனக் கூறி, ஐவர் உள்ளே சென்று பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறுப்பு தெரிவித்துள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்