உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனுக்கு நீதி வேண்டும் : சடலத்துடன் மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-

 

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் பூதவுடலுடன் இறப்புக்கு நீதி கேட்டு இன்று செவ்வாய்க்கிழமை சித்தங்கேணிச் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.