Sri Lanka Tamil News Site

உயிரிழந்தவரை அடையாளம் காண உதவி கோரும் மட்டு.பொலிஸார்

- Advertisement -

மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நாடியுள்ளனர்.

மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அங்கிருந்த பேருந்து நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு குறித்த வயோதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

எனினும் குறித்த வயோதிபர் கடந்த 27.04.2022 அன்று பி.ப 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த வயோதிபரின் ஊர் மற்றும் பெயர் என்பன தெரியாத நிலையில் அடையாளம் காணப்படாத குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை இனங்கண்டுகொள்வதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதுடன், மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!