உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு பிளாட்டினம் விருது

இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka) கடந்த 05.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற வேர்ல்ட் இன்டர்நெசனல் அவோர்ட் (World International Awards 2025) நிகழ்வில் ஆண்டின் வேகமாக வளர்ந்து வரும் கல்வி நிறுவனம் – பிளாட்டினம் விருது” கல்வி நிறுவனம்/சேவைகள் (Fastest Growing Educational Institute of the Year – Platinum Award” Educational Institute/Services )என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தலைமையமாகக் கொண்டு இயங்கிவரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகம் கல்வித் துறையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதை நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் மற்றும் அவரது குழுவினரும் இதன்போது கலந்து கொண்டு பெற்றுக் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கற்கை நிறுவகமானது தற்போது டிப்ளோமா மற்றும் டிகிரி பட்டப்படிப்புகளை யு.ஜி.சி அங்கீகாரம் பெற்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, நடாத்திவருவதுடன் மிகவிரைவில் மாஸ்டர் டிகிரி கற்கை நெறியையும் வழங்கவுள்ளதாகவும், இந்த விருதானது எங்களது கல்விப் பணிக்கான சர்வதேச அங்கீகாரம் என இதன்போது இந்நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க