உதடு கருமை நீங்க வீட்டு வைத்தியம்

உதடு கருமை நீங்க வீட்டு வைத்தியம்

உதடு கருமை நீங்க வீட்டு வைத்தியம்

🔴உதடு பெரும்பாலும் அழகானதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஏனெனில், உதடு நம் முகத்தை மேலும் அழகாக காட்டும். சிவப்பான மற்றும் வெள்ளையான உதட்டைதான் அனைவரும் விரும்புகிறார்கள். கருமையான உதடு அவர்களின் தோற்றத்தை பாதிப்பதாகவும் கவர்ச்சியாக இல்லையென்றும் நினைக்கிறார்கள். இயற்கையாகவே சிலருக்கு கருமையான உதடு இருக்கும். மோசமான பழக்கங்களால் சிலருக்கு உதடு கருமையாக தோற்றமளிக்கும். கருமையான உதடுகள் மரபியல், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உட்பட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.

🔴ஆனால் கருமையான உதடுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கருமையான உதட்டை போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

🔺பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை ஒளிரச் செய்யும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவிஇ இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் உங்கள் உதட்டை கழுவுங்கள். இதன் மூலம் உதடு சிவப்பாக மாறும்.

🔺கருமையாக இருக்கும் உங்கள் உதடுகளை ஒளிரச் செய்ய எலுமிச்சை உதவும். சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் உதடுகளில் தடவிஇ சுமார் 15 நிமிடங்கள் விட்டுஇ தண்ணீரில் கழுவவும். இதனை தினமும் செய்து வந்தால் சிறந்த முடிவு கிடைக்கும்.

🔺சர்க்கரை ஸ்க்ரப் உங்கள் உதட்டின் கருமை நிறத்தை போக்க உதவுகிறது. சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை உங்கள் உதடுகளில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இது உங்கள் உதடுகளை உரிக்கவும், கருமையை ஏற்படுத்தும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவும்.

🔺பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும் ஒளிரச் செய்வதற்கும் உதவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பாதாம் எண்ணெயை உதடுகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

🔺வெள்ளரிக்காய் குளிர்ச்சி மற்றும் ஒளிரும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் உதடுகளில் கருமையைக் குறைக்க உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், உதடு சிவப்பாக மாறுவதை அவதானிக்க முடியும்.

🔺மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.

🔺பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

🔺மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

உதடு கருமை நீங்க வீட்டு வைத்தியம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்