உணவு சமைக்கும் பாத்திரத்துக்குள் வீழ்ந்த சிறுமி உயிரிழப்பு

பொசன் தானசாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த உணவு சமைக்கும் இரும்பு பாத்திரத்திற்குள் வீழ்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 23 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாணந்துறை பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த உணவு பொதி தானசாலையொன்றில் கலந்துகொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு தயாரிக்கும் இரும்பு பாத்திரமொன்றில் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து இவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்