உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 பாரவூர்திகள் கொள்ளை!
ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் காசா பகுதியில் வைத்துக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 109 பாரவூர்திகளில் 97 பாரவூர்திகள் காணாமல் போயுள்ளதாகப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்த குழுவொன்று கைக்குண்டுகளால் தாக்கி இந்த கொள்ளைச் சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளையடித்த குழுவை அடையாளம் காண முடியவில்லை எனப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதனால், மனிதாபிமான உதவியை நம்பி வாழும் 2 மில்லியன் பாலஸ்தீன மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.