உணவுப்பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார, தற்போதைய அரிசி நெருக்கடி காரணமாக அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.