குளிர்பானத்திற்கு பதிலாக வழங்கப்பட்ட துப்பரவு ரசாயனம்: யுவதி வைத்தியசாலையில்
கொழும்பில் குளிர்பான போத்தலில் பரிமாறப்பட்ட துப்புரவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனத்தை பருகியதில் சுகவீனமடைந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி குறித்த யுவதி தாயுடன் உணவகத்திற்குச் சென்று குளிர்பானம் ஒன்றை கொண்டுவருமாறு கட்டளையிட்டுள்ளார்.
இந் நிலையில் அதை குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து சுகவீனமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டார்.
மேலும் சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் நடாத்திய விசாரணையில் சிறுமிக்கு குளிர்பானத்திற்கு பதிலாக துப்பரவு இரசாயனத்தை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை உணவகத்தின் பிரதான கிளை தீர்ந்து போன குளிர்பான போத்தலில் துப்பரவு இரசாயன திரவத்தை அனுப்பியுள்ளதுடன் ஊழியர்கள் அதனை பிரித்து அறிவதில் சிரமத்தை எதிர் கொண்ட விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்