உடல் முழுக்க நகையுடன் தங்க புல்லட்டில் சுற்றும் நபர்

இந்தியாவில் பிரேம் சிங் என்பவர் தங்க நகை அணிந்து தங்க புல்லட்டில் சுற்றி வரும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் போஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே இவருக்கு தங்கம் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். ஆறு ஆண்டுகளுக்கு முன், தங்கத்தின் மீதான காதல் அதிகமாகி, ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 5 கிலோ 200 கிராம் அளவுள்ள தங்கத்தை தன் உடலில் அணிந்து கொண்டிருக்கிறார்.

இப்போது இந்த எடை சற்று கூடுதலாக 5 கிலோ 400 கிராம் ஆகிவிட்டது, கழுத்தில் வெவ்வேறு தடிமனான தங்கச் சங்கிலிகள், விரல்கள் அனைத்திலும் மோதிரங்கள், மணிக்கட்டில் நகைகள் என்றதோடு நிற்காமல் தற்போது அவர் பயன்படுத்தும் பைக்கும் கூட தங்கமாகிவிட்டது. சுமார் 14 லட்சம் ரூபாய் செலவு செய்து தங்க புல்லட்டை தயார் செய்துள்ளார்.

இவர் பீகாரின் முதல் தங்க மனிதன் மற்றும் நாட்டின் இரண்டாவது தங்க மனிதன் என்று அழைக்கப்படுகிறார். முதல் இடத்தில் இருப்பவர் சுமார் 7 முதல் 8 கிலோ தங்கம் அணிகிறார். என்றாவது ஒரு நாள் இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்திற்கு வருவேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் இவர் இந்த தங்கம் அனைத்துமே நேர்மையாக சம்பாதித்தது என்றும் இவை அனைத்திற்குமே கணக்குகளும் ஆவணங்களும் உள்ளதாகவும், ஆகையால் வருமான வரி குறித்தோ அல்லது வேறு எந்த ஏஜென்சி குறித்தும் எனக்கு பயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்