Sri Lanka Tamil News Site

உடலுறவின் போது உயிரிழந்த 67 வயதான தொழிலதிபர்- கணவனின் உதவியுடன் சடலத்தை அகற்றிய பெண்

- Advertisement -

தொழிலதிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் , உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து கர்நாடகா புத்தேனஹள்ளி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை தொடங்கிய போது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கர்நாடகா-ரோஸ் கார்டன் பகுதி ஜேபி நகரில் நவம்பர் 17ஆம் திகதி 67 வயதான தொழிலதிபரின் சடலம் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்நிலையில் பொலிசார் உயிரிழந்த நபரின் கையடக்க தொலைபேசி பதிவுகளை கொண்டு நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின.

சம்பவ தினமான நவம்பர் 16ஆம் திகதி மாலை தொழிலதிபர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இரவு வீடு திரும்புவதாக கூறிச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் அழைப்பை எடுத்த போதும் பதில் இலலை இந்நிலையில், மறுநாள் காலைதான் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையடுத்து மாலைக்கு பின் அந்த நபரின் அழைப்புகளை ஆய்வு செய்த பொலிசார் அதில் இருந்து சரக்கி என்ற பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

35 வயதான குறித்த பெண்ணுக்கு 67 வயது தொழிலதிபருக்கும் சமீப காலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.  அது நெருக்கமாக மாறியுள்ளது. அன்றைய தினம் மாலை இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

உடலுறவின் போது  வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது அருகில் இருந்த சாவி கொடுத்தபோதும் சரியாகாமல் அவர் உயிரிழந்துவிட்டார். தங்கள் உறவு வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெண் கணவர் மற்றும் சகோதரனை அழைத்து அவர்களின் உதவியுடன் உடலை பிளாஸ்டிக் பையில் மூடி ரோஸ் கார்டன் பகுதியில் வீசியுள்ளனர்.

பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் பெண் , காணவன் , சகோதரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ள நிலையில் , பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் பொலிசார் காத்துள்ளனர். அதன்பின்னரே பெண்ணின் வாக்குமூலம் முழுவதும் உண்மைதானா என்பது தெரியவரும்.

- Advertisement -