உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை

சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் கட்டணம் செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.