மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

 

-மன்னார் நிருபர்-

எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா அவர்களுக்கு ஒளியை தர வேண்டும். என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயேசு நாதரின் உயிர்ப்புத் திருவிழா எம் அனைவருக்கும் ஒரு எதிர் நோக்கைத் தரும் விழாவாக இருக்கிறது.இயேசுநாதர் தனது வாழ்க்கையில் எத்தனையோ பேரை குணமாக்கினார்.

எத்தனையோ பேருக்கு உயிர் கொடுத்தார்.பல்வேறு நோயினால் கஸ்டப்பட்டவர்களை அவர் குணமாக்கினார்.ஆனால் அன்று அவரை சூழ இருந்த யூத மக்கள் அவர் ஒரு இரட்சகர்.

அவர் எமக்காக வந்த ஒரு மெசியா என்று பாராமல் அவரை பாடு படுத்தி, சிலுவையைத் தூக்கிச் சொல்லி இறுதியில் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.ஆனால் அவர் கூறியதன் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

இதனை அவருடைய சீடர்கள் சாட்சிகளாக இருந்தபடியினால் அதனை அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்கள்.இவ்வாறு இயேசு நாதருடைய உயிர்ப்பு விழா மற்றவர்களுக்கு ஒளி வீசும் விழாவாக இருக்கிறது.

எமது நாட்டில் மக்கள் பல துன்பங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள்.ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா அவர்களுக்கு ஒளியை தர வேண்டும். அவர்களை ஒளிர்விக்க வேண்டும்.அவர்கள் நிம்மதியும், அமைதியும் காண வேண்டும் என்று நாங்கள் ஆசிக்கின்றோம்.

இயேசு நாதரின் சிறப்பான உயிர்ப்பு விழா ஊடாக மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட்டு அவர்கள் நல்ல ஒரு எதிர்காலத்தை தேடிப் போக உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்கு புது வாழ்வு அழிக்க வேண்டும்.அனைவருக்கும் உயிர்ப்பு விழா சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்