ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு நடிகர் விஜய் அழுத்தம்
இலங்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது, இந்திய மத்திய அரசாங்கம் தமிழக அரசாங்கத்தின் ஆலோசனையையும் பெற வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான விசேட தீர்மானம் ஒன்று கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்மையில் தமது அரசியல் பிரவேசத்தை விஜய் அறிவித்து, அவரது கட்சியின் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தி இருந்தார்.
தற்போது அவர் புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்