இஸ்ரேல் வான்தாக்குதல் : 10 பாலஸ்தீன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் காசாவின் ரஃபா நகர் மீது நடத்திய வான்தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.

வணிகப் பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலர் காசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு கரையில் இருந்து காசா முனைக்கு வணிகப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பாலஸ்தீன பாதுகாப்புப்படையினர் கடும் பிரயத்தனத்துடன் வணிகப் பொருட்களை பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

பாலஸ்தீன பாதுகாப்புப்படையினரை இலக்கு வைத்தே தற்போது தாக்குதல் நடத்தப்படுவதாக பாலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்