இஸ்ரேலியத் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் இயங்கிவரும் செய்தி நிறுவனத்தின் கார் ஒன்றின் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் மோதல்களினால் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்