இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி

அதிகளவிலான இளைஞர்கள் தற்போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார விஷேட வைத்தியர் விந்தியா குமாரிபேலி தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறைமை மூலம் துணைவர்களைத் தேடுதல் மற்றும் பாலியல் தொடர்பான தெளிவின்மை போன்ற காரணங்களால் இந்த நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆண்டு 694 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

இவ்வாறு அடையாளங் காணப்பட்ட புதிய நோயாளர்களில் 15 சதவீதமானவர்கள் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாவர்.

கடந்த ஆண்டுகளை விட தற்போது எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார விஷேட வைத்தியர் விந்தியா குமாரிபேலி வலியுறுத்தியுள்ளார்.