மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நிறுத்தி இருந்த பஸ்வண்டியில் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞனை, பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பண்வண்டி உரிமையானரின் கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டியில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் , குறித்த பஸ்வண்டியில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துனர் மீது தனியர் பஸ்வண்டி உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து, கடமையில் இருந்த அவரை சம்பவதினமான இன்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவரை செய்துள்ளார்
இதனை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.