இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

இலத்திரனியல் அடையாள அட்டைகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் இலத்திரனியல் மயமாக்கப்படும் என்று நம்புவதாகவும் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலத்திரனியல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்திய உதவி மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM